BREAKING! அதிமுக முன்னாள் அவைத்தலவர் புலவர் புலமைப்பித்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

 

அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் உடல் நிலை திடீர் பின்னடைவு அடைந்துள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
புலவர் புலமைப்பித்தன் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை நீலாங்கரை சாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அடையாறு ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது