விவசாயிகள் மரணத்திற்கு காரணமான அமைச்சர் மீது வழக்கு பதிவு!

 

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், வன்முறை அரங்கேறி , பலர் உயிரிழக்க நேர்ந்தது. விவசாயிகள் மீது காரை மோதி, விவசாயிகள் உயிரிழக்க காரணமான சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோர் கூட்டுச் சதி செய்து ஜீப்பை ஏற்றியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் துணை முதல்வர் கேசவ் மவுரியா ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கே விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஜீப் கூட்டத்திற்குள் புகுந்து, பலர் மேல் ஏறி இறங்கியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் உருவானது.

ஜீப்பை வைத்து, விவசாயிகள் மீது ஏற்றிக் கொன்றது உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்ற தகவல் வெளியானது. இதனை அமைச்சர் தரப்பு மறுத்துள்ளது. கார் மட்டும் தங்களுக்கு சொந்தமானது. ஆனால் சம்பவ இடத்தில் நாங்கள் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்