தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க பரிசீலனை! வானதி சீனிவாசன் பகீர் தகவல் !

 

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த போதிலும் மக்கள் முக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொங்கு நாட்டு பகுதிகள் இணைக்கப்பட்டு தனி மாநிலமாக பிரிக்கப்படும் என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் கொலை வழக்கில் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். மத்திய அரசின் தடுப்பூசிகளை தனியார்களுக்கு சப்ளை செய்வதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அரசு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இடிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் மாற்று இடங்களில் கட்டி தந்து மக்களின் மனித உணர்வுகளைக் காக்க வேண்டும்.

தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. “கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் நீண்டநாள் கோரிக்கையாகவே இருக்கிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள மாநில அரசாங்கம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் அடிப்படையில் கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரீசிலணை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.