நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. மேலும் கூட்டம் கூட்டமாகவும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி
காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.
டீக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

அத்தியாவசிய தேவைகளுக்காக அதாவது திருமணம், நெருங்கிய உறவினர்க இறப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைக்களுக்காக மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இ பதிவு பெற இந்த இணையதள லிங்-https://eregister.tnega.org கிளிக் செய்ய வேண்டும். அதில் எதற்காக பயணம், எப்போது பயணம் போன்ற சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதனை நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சப்மிட் கொடுத்தால் நமது இ பதிவு ரிஜிஸ்டர் செய்துக்கொள்ளப்படும். அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணிற்கு இதுகுறித்த மெசேஜ் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த இ- பதிவு முறைக்காக வழங்கப்பட்டிருக்கும் பிரத்யேக இணையதளத்தில் நாளை மே 17 முதல் விண்ணப்பிக்கலாம்.