ரேசன் கடைகளில் 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள்!மோடி உத்தரவு!

 


இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.33 லட்சம் பேர்.பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


கொரோனா கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை உருவாவதாகவும் மக்களுக்காகவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.


இதனையடுத்து பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் மே, ஜூன் மாதத்திற்கு 5 கி. தானியங்கள் இலவசமாக விநியோகிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர் என்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக 2 மாதங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது என்று மோடி அறிவித்துள்ளார்