காய்கறிகள், பழங்கள் வாங்க இந்த நம்பருக்கு மிஸ் கால் கொடுங்க!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று  முதல் தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கில் மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளின் தட்டுப்பாட்டை போக்க தோட்டக்கலை துறை சார்பில் இன்று முதல் அதாவது ஊரடங்கு நாட்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காய்கறி விற்பனைக்காக 5,822 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் விநொயோகம் குறித்த அனைத்து தகவல்களுக்கும் 044 22253884 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.