அதிர்ச்சி!!.. ஏப்ரல் 1 முதல் வீட்டு கடன் வட்டி உயர்வு!எஸ்பிஐ!

 


இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் எஸ்பிஐ வங்கி வீட்டுக்கடன் குறித்து அந்த வங்கியின் வலைதளத்தில் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிக குறைந்த அளவாக 6.70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது குறுகிய கால சலுகை மட்டுமே. அதன்படி ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.70 சதவீதமும், ரூ.75 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.75 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த சலுகை மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.95 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயா்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

dinamaalai.com