தலைவர்கள் சிலைகளை அகற்ற உத்தரவு.

 

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்.

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள், கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பராமரிக்க தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்க உத்தரவு.

அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குற்றச்சாட்டு.

சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது