இந்தியாவை காணவில்லை!வைரலாகும் அட்டைப்படம்!

 


இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிதிவீரமடைந்து வருகிறது. படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய,மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை இந்நிலையில் இந்திய அரசை காணவில்லை’ என அவுட்லுக் இந்தியா பத்திரிகை கவர் போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில் பெயர் இந்திய அரசு, வயது 7 மற்றும் கண்டுபிடித்தால் குடிமக்களிடம் தெரிவியுங்கள் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அவுட்லுக் இந்தியா பத்திரிகையின் இந்த கவர் போட்டோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. நிபுணர்கள் முன்கூட்டியே இந்த 2ம் அலை குறித்து எச்சரித்தும் மத்திய அரசு அலட்சியத்துடன் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவில்லை என குற்றம் சாட்டி வருகின்றன.

கொரொனா 2வது அலை பரவி வரும் வேளையில் பல மாநிலங்களில் தேர்தல் காரணமாக நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள், மத கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி அளித்ததே காரணம் என விமர்சித்துள்ளனர். அடுத்ததாக ஹரித்துவார் கும்பமேளாவை நடத்த அனுமதித்தது அரசு செய்த மாபெரும் தவறு.அதன்படி கும்பமேளாவில் பங்கேற்ற பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது பெரும் வேதனையை அளித்துள்ளது.


இந்தியாவில் அடுத்ததாக 3வது அலைக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். 2வது அலையிலேயே உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வருகின்றன. புனித நதியாக மதிக்கப்படும் கங்கை இன்று சடலங்களை சுமந்துகொண்டிருக்கிறது.


மின்மயானங்களில் 24 மணிநேரமும் சடலங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதை விமர்சிக்கும் வகையில் அவுட்லுக் இந்தியா “இந்திய அரசை காணவில்லை” என கவர் போட்டோ வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.