தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு அசுர வேகம் எடுத்து வருகிறது. முதல் அலையை விட 2வது அலை மிகத் தீவிரமடைதுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகி வரும் கொரோனா தொற்றை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஷ்கர், கர்நாடகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7,819 பேர். இதுவே சென்னையில் மட்டும் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 2,564 பேர். இது மேலும் உயரலாம் என எச்சரிக்கை விடுக்கபட்ட நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்க பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.