அதிரடி ! இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடையாது!

 


இந்தியாவில் மக்கள் தொகை பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிரடி அரசு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை கட்டுப்படுத்துதல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாநில அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.


நாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை ஏற்பவர்கள் அரசுப் பணியில் இருந்தால் கூடுதலாக இரண்டு இன்கிரிமென்டுகள் வழங்கப்படும், 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆனால், மானிய விலையில் வீடு, நிலம் வாங்க உதவி செய்யப்படும் . இதுதவிர ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.