புதுச்சேரி 3 கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

 


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி முதல் கட்டதேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 2,7,13 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.