அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! இறுதி கட்ட விசாரணை!

 


இந்தியாவில் மருத்துவ படிப்பை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன் படி நடப்பாண்டிற்கான நீட் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை அக்டோபர் 21 ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thane: Students arrive at Thane Kasarawadwali examination centre to appear in Joint Entrance Examination (JEE ) Main-2020 amid COVID-19 pandemic, in Thane, Tuesday, Sept. 1, 2020. (PTI Photo) (PTI01-09-2020_000196B)

இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டின் படி கடந்த ஆண்டே 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது