தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு!

 

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் . தமிழகத்தில் இருந்து தமது பொறுப்புக்களை முடித்து கொண்டு செப்டம்பர் 15 காலை கிளம்பினார். தற்போது தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் வெ.இறையன்பு, சைலேந்திர பாபு, சங்கர் ஜிவால் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆர்.என். ரவி செப்டம்பர் 18 இன்று தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

கொரோனா காலத்தை முன்னிட்டு கிண்டி, ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் , எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் உட்பட சுமார் 500 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வரும் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தமிழகத்திற்கு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.