இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல்

 

தமிழக்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் 9 மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் விவரங்களை வெளியிட்டிருந்தது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் தொடங்கி உள்ளது. மேலும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் பழனிகுமார் அறிவித்துள்ளது.