உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

 


இந்தியாவில் கொரோனா பரவல் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பாதிப்பு உள்ள பகுதிகளில் ஊரடங்குகள் விதிக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் முன்ஜாமீன் கோருவதற்கும் இந்த ஊரடங்கு காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க கூடிய வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவும், முன்ஜாமின் கோரும் மனுக்களை ஏற்கவும் வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றமே மறு ஆய்விற்காக மனுதாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் காவல் துறையின் விசாரணை அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அமைந்துள்ளது.மேலும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வது தனிநபருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவது எனத் தெரிவித்துள்ளது.