இன்று மோடி தமிழக கவர்னர் சந்திப்பு!

 


தமிழகத்தின் தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி. இவர் கவர்னராக பதவி ஏற்றதும் செப். 23ல் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்தார்.

தற்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு கவர்னரை இபிஎஸ் மற்றும், அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தற்போது டெல்லிக்கு திடீர் விஜயமாக விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.


கவர்னர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.