சாவல்களை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி தயாராக உள்ளது. – மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

 

அனைத்து அறிகுறிகளை கொரோனாவாக நினைத்து பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன் வரவேண்டும். – கொரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கொரோனா மருத்துவ சிறப்பு அவசர ஊர்தியை தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கார்களை ஆம்பூலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும். குறைந்த பாதிப்பு கொண்ட கொரோனா பாதிப்புடைய நோயாளிகளுக்கு இந்த கார் மூலம் தொடங்கப்படுள்ள ஆம்பூலன்ஸ் சேவை பயன்படும். இதன் மூலம் கொரோனா பாதித்து ஆக்ஸிஜன் வசதி தேவைப்படுபவர்களுக்கு 108 ஆம்பூலன்ஸ் முறையாக பயன்படும். சென்னையில் நிலவி வரும் ஆம்பூலன்ஸ் பற்றாக்குறை குறையும்.

முதற்கட்டமாக 50 ஆம்பூலன்ஸ்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது படிப்படியாக 250 ஆம்பூலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

மேலும், சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 30 ஆயிரம் மருத்துச உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை கட்டாயம் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 2743 ஆக்ஸிஜன் செறியூட்டிகள் சுழற்சி முறையில் தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைத்து பயன்படுத்தப்படும். மேலும் சென்னையில் 4 இடங்களில் ஆக்ஸிஜன் நிலையம் அமைத்து வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் ஆக்ஸிஜன் நிலையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலங்களில் வரும் சாவல்களை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி தயாராக உள்ளது.

இதனை தொடர்ந்து பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக், அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அனைத்து அறிகுறிகளை கொரோனாவாக நினைத்து பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன் வரவேண்டும். வீடு தேடி வரும் தன்னார்வலர்களிடம் உண்மையை கூறி கொரோனா மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.