பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணம் இது தான்!

 

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ100க்கும் அதிகமாக பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடுத்தர பொதுமக்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பெட்ரோல் விலை குறைந்தபாடில்லை.

இது குறித்து
மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் ராமேஸ்வர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
பெட்ரோல் விலை இந்தியாவில் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். பெட்ரோல் விலை எப்போதும் உயர்த்தப்படவில்லை. அதற்கு விதிக்கப்படும் வரிகள் தான் அதிகரித்து வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.40 . இதில் மாநில அரசு ரூ28ம், மத்திய அரசு ரூ 30 வரி விதிக்கின்றன. அதன்படி இங்கு பெட்ரோல் விலை ரூ.98.

இந்தியாவில் 100கோடி பேருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணம் எல்லாம் தான் பெட்ரோல் வரியாக விதிக்கப்படுகிறது.
மாநில அரசுகள் நினைத்தால் பெட்ரோல் மீதான மாநில வாட்வரியை வெகுவாக குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.