தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு நேரடியாக சப்ளை முடியாது!

 


இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 – 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது’


அந்த வகையில், இந்தியாவிலிருந்து பஞ்சாப் மாநில முதல்வர் ஸ்புட்னிக்-வி, பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டார்.


இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், தங்களது மாடர்னா தடுப்பூசியை நேரடியாக பஞ்சாப் மாநில அரசுக்கு வழங்க முடியாது எனவும், நேரடியாக இந்திய அரசு மட்டுமே தடுப்பூசியை கொள்முதல் செய்யமுடியும் எனத் தெரிவித்து விட்டது. இதனால் மாநிலங்களுக்கு மாடர்னா நிறுவனம் தடுப்பூசிகளை நேரடியாக சப்ளை செய்யாது எனத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.