மதுப்பிரியர்களே உஷார்! மதுபானங்களின் விலை உயரும் அபாயம்!

 


தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக திறக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு மது விற்பனை, ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக ஆண்டுதோறும் சுமார் 30,00,00,000/-கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டு வந்த போதிலும் இதுவரை அரசு மதுபானங்களின் விலையை அதிகரிக்கவில்லை.
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நேற்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்திலும் மது விலை உயர்த்தப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து டாஸ்மாக் அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில் ‘தமிழகத்தின் தற்போதைய சூழலை கவனத்தில் கொள்கையில், மதுபானங்களின் விலையை அதிகரிக்க கூடிய தேவை உருவாகியுள்ளது. இதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளை தமிழக அரசு ஏற்கனவே துவங்கி விட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.