2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில்! ஐ.ஒ.சி அறிவிப்பு!

 

உலகம் முழுவதும் பரவி கொரோனா காரணமாக சென்றஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்து சேர்ந்துள்ளனர்.

லட்சக்கணக்கானவர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா காரணமாக மிக மிக எளிமையாக கடும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து 11,500 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 2032ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், 2028ம் ஆண்டிற்கான போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.