ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு!

 

கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பார்வையாளர்கள் யாருமின்றி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தடகளப் பிரிவிற்கு தமிழகத்திலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். . ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.


திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சுபா வெங்கடேசனும் மிகுந்த வறுமையிலும் ஒலிம்பிக்கில் கால் பதித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வழங்க வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


வீராங்கனைகள் இருவரும் தாயகம் திரும்பிய உடன் அவர்களுக்கான அரசு பணிக்கான ஆணை நேரடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.