T20 World Cup: இந்தியா வெற்றிபெற பெங்களூருவில் ‘ஹவன்’ நிகழ்ச்சி

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சூப்பர்-12 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில், துபாய் சர்வதேச அரங்கம் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சனிக்கிழமை இந்திய ரசிகர்கள் ‘ஹவன்’ நிகழ்ச்சி நடத்தினர்