14 நாட்கள் தற்செயல் விடுப்பு! அரசு ஊழியர்கள் உற்சாகம்!

 


தமிழகத்தில் கொரோனா காரணமாகபெரும்பாலான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ரேஷன் கடை, காவல் துறை, மருத்துவத்துறை தவிர மற்ற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் இயக்கப் படவில்லை.


அப்போது இயக்கத்தில் இருந்த அனைத்து துறையைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கும்அவர்கள் குடும்பத்தார்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது.


இது குறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களில் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்.

இந்த அரசாணை முழுக்க முழுக்க மக்களின் நலன் கருதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.