இன்று (ஜூன் 10) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 48 ரூபாய் குறைந்தது!

 

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,920 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6 ஆக குறைந்து, ரூ.4,615 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 75,800 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 300 உயர்ந்து 76,100 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.