ஜெயலலிதா சொத்து யாருக்கு சொந்தம்..? இன்று தீர்பளிக்கும் உயர்நீதிமன்றம்..!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டம் ’வேதா நிலையம்’ வீடு நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக சட்டம் இயற்றப்பட்டு வீடு அரசுடமையாக்கப்பட்டது. மேலும் வேதா நிலையத்துக்கு சொந்தமான அசையும் சொத்துக்களும் அரசுடையாக்கப்பட்டன.

இதற்கு ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர்களின் வாரிசான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள், ஜெயலலிதா சொத்தை அரசுடமையாக்குவதற்காக ரூ. 67.9 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது இந்த பணத்தை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி செலுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் அதிகாரி உடைய செயல்பாட்டை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் வழக்கு முறையிட்டு இருந்தனர்.

நீதிபதி சேஷாய் முன்பு இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்ததை அடுத்து உயர்நீதிமன்றம் இன்று பிற்பகலில் இவ்வழக்கில் தீர்ப்பு கூறவுள்ளது.