தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . இருந்த போதிலும் பாதிப்புக்கள், மூன்றாவது அலை, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தற்போதைய நிலவரம், பள்ளிக்கூடங்களில் தடுப்பு நடவடிக்கைகள், விநாயகர் சதுர்த்தி, ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்களை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் . பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொரோனா தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.