நிறம் மாறும் அரசுப் பேருந்துகள் !

 

தமிழகத்தில் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் செய்து கொள்ளலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் பேருந்துகளின் நிறம் விரைவில் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்க்குறிப்பில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில்தான், போக்குவரத்துத் துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது
குறிப்பாக, பேருந்துகளை அரசுடைமையாக்கி போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கியதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கி சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவார்கள் என்று கூறினார்.
மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தான் வலியுறுத்தியதால் தான் பணப்பலன் வழங்கியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார், ஆனால் அது முற்றிலும் தவறானது என கூறியுள்ளார்.

மேலும் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம், பெண்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த பேருந்துகளில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் நிறமாற்றம் செய்வது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.