திருவள்ளூரில் கொடூரம்... நீலகிரியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி பலாத்காரம்.. திருமண ஆசைக்காட்டி இளைஞர் வெறித்தனம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 15 வயது சிறுமியை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருத்தணியைச் சேர்ந்த நாகராஜ் (20) என்ற இளைஞருக்கு, சமூக வலைத்தளம் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் தீவிரமாகப் பேசி பழகி வந்த நிலையில், நாகராஜ் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே திடீரென மாயமான சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு நாகராஜுடன் இருந்த அச்சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், நாகராஜ் அச்சிறுமியைக் கடத்திச் சென்று திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாகராஜ் மீது போக்சோ உட்படப் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.