நீட் தேர்வுக்கு எதிராக தனிநபர் மசோதா!! ராஜ்யசபாவில் ஹிட் அடித்த திமுக எம்பி.!!

 

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட்தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். இதற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை.

சமீபத்தில் கவர்னரைச் சந்தித்த முதல்வர் இந்த மசோதாவுக்கு ஒப்புதலளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்படி ராஜ்யசபாவில் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார் திமுக எம்.பி.வில்சன். இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் மட்டும் இதுவரை நீட் தேர்வினால் 17 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டார்கள்.

இதனை எதிர்த்து திமுக பலமுறை போராட்டமும் நடத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தனிநபர் மசோதா மட்டுமில்லை. உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்கவும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.