வீடு, கடைகளுக்கு மின் கட்டணம் செலுத்த புதிய வழிமுறைகள்!

 


தமிழகத்தில் 2வது கொரோனா அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை அமுல்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வீடுகள்தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையை 85 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 வாய்ப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதை விரும்புகிறார்களோ அதன்படி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் எனப்படும் கூடுதல் வைப்பு தொகையும் பொதுமக்களிடம் வாங்கக்கூடாது எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.