இனி இவர்களுக்கு எல்லாம் மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி! முதல்வர் தொடங்கி வைத்தார்!

 

திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசு சார்பில் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 2000/ வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6,600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயனடைவார்கள்.

இது தவிர முதல்வர் மு.க.ஸ்டாலின் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1,000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளையும் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.