தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து மே 24 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஜூன் 7முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.


கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் 14 உடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம். இந்த கூட்டத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாட்டுடன் டோக்கன் முறையில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.