இனி இவங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?!

 


தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரேஷனில் அரிசி வழங்கப்படாது என வாட்ஸ் அப்பில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடும் கிடையாது.

தொடர்ந்து இதே நிலை தொடரும். சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறுபவர்களுக்கும் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட சொந்த கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை எனபொய்யான தகவல்கள் பரவி வருகின்றன.


தமிழகத்தில் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பரவிவரும் இதுகுறித்த செய்திகள் தவறானவை. அரசிற்கு எதிரான விமர்சனங்கள் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.