எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? இன்று பிறந்த நாள் கொண்டாடும் உதயநிதி!!

 

தமிழகத்தில் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தற்போது படிப்படியாக அந்த இடத்திற்கு தம்மை உயர்த்தி கொள்ள விடியல் நாயகனின் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக களம் இறக்கப்பட்டுள்ளார்.கலைஞரின் ஆற்றல், சமயோசிதம் அத்துடன் தம் நிர்வாக திறமைகளையும் உதயநிதிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார் தமிழக முதல்வர்.

தேர்தலுக்கு வாக்கு கேட்க சென்ற போது மட்டும் அல்ல . அதில் மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் கூட எளியவர்களுடன் இனிமையாக சிரித்த முகத்துடன் பழகி வருகிறார்.ஹெலிகாப்டரில் இருந்த படியே தண்ணீரில் தத்தளித்த முதல்வரை பார்த்த தமிழக மக்களை உதயநிதியின் எளிமை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.


அம்மா உணவகம், குடிசை வீட்டு பாட்டியின் முத்தம், மாமா என அழைக்கும் குழந்தைகள், அண்ணா என கூவி அழைக்கும் பெண்கள் என தமிழகத்தின் அடுத்த விடிவெள்ளியாய் தம்மை நிலைநிறுத்தி வருகிறார்.தமக்கு எதிராக வரும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் மட்டும் கவனத்தை செலுத்தி மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.


இன்று அவருடைய விடியல் நாள் . இந்த நாளில் நாம் தனிமனிதர் அல்ல. அண்ணாவின் கொள்கை பிடிப்பில் உதயமான திராவிடத்தை உயர்த்தும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடைக்கோடி தமிழனது வாழ்விலும் உதயத்தை நிலை நாட்ட வேண்டும்.விடியட்டும் தமிழகம்.