அதிர்ச்சி!! ரூ. 50 கோடி வரை வரி ஏய்ப்பு!! தமிழக பல்கலை கழகங்கள் விதிமீறல்!!

 

தமிழகத்தின் அண்ணா யூனிவர்சிட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆகியவை கடந்த 4 வருடங்களாக ஜி.எஸ்.டி பதிவு எண் பெறாமல் சுமார் ரூ. 50 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக திகழ்கிறது அண்ணா பல்கலைக்கழகம். அரசின் மருத்துவ கல்லூரிகள் செயல்படுவதற்கான பாடத்திட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வகுத்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்தும் இந்த பல்கலைகழகங்களில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இரு பல்கலைக்கழகங்களும் கடந்த 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஜி.எஸ்.டி வரி விதிப்பு அறிமுகம் செய்த நாள்முதல் இவ்விரண்டும் அதில் இணையவே இல்லை. பதிவு எண்ணும் பெறவில்லை.

இரண்டு பல்கலைக்கழகங்களும் பொது ஜி.எஸ்.டி பதிவு எண் பெறாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதால், அண்ணா பல்கலைக்கழகம் ரூ.30 கோடியும், மருத்துவ பல்கலைக்கழகம் ரூ.20 கோடி என மொத்தம் ரூ. 50 கோடி வரை வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜி.எஸ்.டி உயர் அதிகாரிகள் கூறுகையில், இரண்டு பல்கலைக்கழகங்களும் நோட்டீஸ் அனுப்பி முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.