ஆண்டுக்கு 5,00,000 பேர் உயிரிழப்பு!! உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

 


ஒவ்வொரு வருடமும் தேசிய உடல் உறுப்பு தான தினம் நவம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தலைநகரில் உறுப்பு தான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரபல மருத்துவர் உரையாற்றினார்.

அவர் “ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது” ஆண்டுக்கு 1.5 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. ஆனால் அதில் 5,000 பேருக்கு மட்டுமே உறுப்புக்கள் கிடைக்கப் பெற்று அறுவை சிகிச்சை நடக்கிறது.

சுமார் 2 லட்சம் பேர் கல்லீரல் தானம் கிடைக்காததால் உயிரிழண்டு வருகின்றனர். இந்தியாவில் உடல் உறுப்பு தான விகிதம் 0.01% மட்டுமே .இந்த நிலை மாறி மக்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன் வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.