வீட்டை சுற்றி அமைக்கப்பட்ட அதிசய பாலம் !வைரலாகும் புகைப்படங்கள்!

 

சாலைகள் அமைக்க பொதுவாக நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும். இதில் நில உரிமையாளர்க்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சீனாவில் நெடுஞ்சாலை அமைக்க ஒரு பெண்ணின் வீட்டை அரசாங்கம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் அந்த பெண்மணி வீட்டை தர மறுத்துவிட்டார். 10 வருடங்கள் போராட்டி பார்த்தும் பலனில்லை இதனையடுத்து அரசாங்கம் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலையை அமைத்துள்ளது. இந்த சம்பவம் சமீபத்தில் சமுக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சீனாவில் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள தனியா் நிறுவனம் அரசு குறிப்பிட்ட அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி அவர்களது இடத்தை எல்லாம் வாங்கி அதில் சாலை அமைத்து வந்த நிலையில் 10 ஆண்டுகளாக அப்பகுதியில உள்ள ஒவ்வொரு இடத்தின் ஓனரிடம் பேசிய அந்நிறுவனம் அவர்களுக்கு பணமாகவோ அல்லது வேறு இடமாகவோ கொடுத்து இந்த இடத்தை வாங்கியது.

ஆனால் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடான அதாவது சுமார் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட இடத்தை சொந்தமாக வைத்திருந்த பெண்ணா லியாங் என்பவர் அந்த இடத்தை விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.

இவர்கள் அந்த பெண்ணிற்கு அதிக தொகை தருவதாக கூறியும் அந்த பெண் இடத்தை கொடுக்கவில்லை.இரண்டு பிளாட்களை ஒதுக்கி தருகிறோம் எனக் கூறியும் அந்த இடத்தை தருவதாகஇல்லை.

இந்த போராட்டம் சுமார் 10 ஆண்டுகள் வரை நடந்தது. இந்த பெண்ணிடம் எப்படியாவது வீட்டை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அங்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் துவங்கியது. இறுதிவரையிலும் அந்த பெண் விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை வாங்க முடியாது என்பதால் அந்த பெண் இருக்கும் இடத்தில் மட்டும் ரோடு செல்லாமல் சுற்றி செல்லும் படி பாலத்துடன் கட்டமைக்கப்பட்டது.

தற்போது அந்த பாலம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது அந்தபாலத்திற்கு நடுவே அந்த வீடு மட்டும் தனியாக இருக்கிறது.