வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

 


உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை அனைத்து உலக நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை திவீரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிய கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஆறு வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. ஆனால் தடுப்பூசி போடும் பணிகளில், உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகிறது.


இதை தவிர்க்கும் வகையில் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். அதன்படி தடுப்பூசிகளை பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்க அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் முன் வரவேண்டும் .

உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் தான் விரைவில் கொரோனாவைகட்டுப்படுத்த முடியும். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.இதற்கு முன்பே அமெரிக்காவில் தேவைக்கு அதிகம் உள்ள 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு பிரித்து வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.