விருது வேண்டாம்! இங்கிலாந்து ராணியின் தடாலடி நடவடிக்கை!

 


இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பிரபல பத்திரிகை முதியவர்களை கௌரவித்து வருகிறது.அதன் அடிப்படையில் பொது வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ‘ஓல்டி ஆப் தி இயர்’ என்கிற விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த முதியவர் விருது 95 வயதான இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை தேர்வு செய்து அதை அறிவித்தது.
ஆனால் ராணி 2ம் எலிசபெத் அந்த விருதை பெற மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் ‘‘முதுமை என்பது மனதில்தான் உடலில் அல்ல. நான் என்னை இளமையாகவே உணர்கிறேன். நான் இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல. தகுதியான நபரை கண்டுபிடித்து அந்த விருதை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


மறைந்த இங்கிலாந்து இளவரசர் , ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் 2011ல் தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.