ரெம்டெசிவிரை பயன்படுத்த வேண்டாம்! உலக சுகாதார மையம்!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவும்போது சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார மையம் பரிந்துரை செய்திருந்தது.

உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்தன. வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப உலக சுகாதார மையம் பரிந்துரைகளில் மாற்றம் செய்து வந்தது.


அந்த வகையில் கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார மையம், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை இந்தியா ஏற்கும் பட்சத்தில் இந்தியாவில் இனிமேல் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப் படமாட்டாது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.