இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 9 வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார்

 

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 1977-ம் ஆண்டு முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது அரசியலில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட ரணில் விக்ரமசிங்கே, 1994-ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றார். நான்கு முறை பிரதமராக பதவி வகித்திருக்கிறார்.

இந்நிலையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, கடந்தாண்டு (2020) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது இதில் ரணில் விக்ரமசிங்கேவும் தோல்வியை தழுவினார். எனினும், தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கேற்ப எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு நேற்று 9-வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார். இதன் மூலம் 72 வயதான ரனில் விக்கிரமசிங்கே, 1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.