நியூயார்க்கில் இளையராஜா விளம்பரம் வெளியீடு!! ரசிகர்கள் வரவேற்பு!!

 


தமிழ் சினிமாவில் இசைஞானியாக புகழ் பெற்றவர் இசைஞானி இளையராஜா . இவர் தன்னுடைய பாடலை பிரத்யேகமாக கேட்க விரும்புபவர்களுக்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்த பிளேலிஸ்ட்டுகளை விளம்பரப்படுத்த 3 நிமிட விளம்பரப் படமும் வெளியிடப் பட்டுள்ளது.இதனை மேலும் மக்களிடையே கொண்டு சேர்க்க நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டது.

இளையராஜா இந்த விளம்பரத்தை தன்னுடைய பேஸ்புக்கில் இணைத்துள்ளார். அதில் ‘இந்த புனிதமான நாளில் இசையின் ராஜா, நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் ஸ்கொயர். ராஜா விதிகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.