இதிலும் இந்தியாவுக்கே முதலிடம்! கலாய்க்கும் உலக சுகாதார நிறுவனம்!

 

கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதையும் கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது. முதல், 2, 3 என அடுத்தடுத்து அலைகள் வந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. உலக நாடுகளும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி என மக்களுக்கு தீவிர தடுப்பு முறைகள் குறித்து அவ்வப்போது வழங்கிக் கொண்டே வருகிறது.
கொரோனா குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கொரோனாவை பற்றி பொய்யான தகவல்கள் பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளன.அதன்படி உலக அளவில் மொத்தமாக 138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்து பொய்யான தகவல் பரவியதாகவும் இந்தியாவில் தான் அதிக அளவு பரவியதாகவும் ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவுகள் குறித்த அனைத்து விளக்கங்களும் ‘தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் இணையப் பயன்பாட்டின் மூலம் பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இனியாவது கொரோனா குறித்த தகவல்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.