அமேசான் தலைவருடன் விண்வெளி பயணம்! ரூ.205 கோடிக்கு டிக்கெட் வாங்கிய பிரபலம்!?

 

அமேசான் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் பயண ஏற்பாட்டை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் முதல் பயண திட்டத்தில் இம்மாதம் 20ம் தேதியன்று அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம் செய்யவிருக்கிறார். இந்நிலையில், அமேசான் நிறுவன தலைவருடன் விண்வெளிக்கு பயணம் செல்லும் டிக்கெட் ரூ.205 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.


அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிப்பதற்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதியன்று பெஸாஸ் மற்றும் அவரது சகோதரருடன் இந்த பயண டிக்கெட்டை ஏலத்தில் வாங்கியுள்ள நபரும் பயணிப்பார் என தெரிகிறது. இன்னும் அவரது பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த பயண டிக்கெட்டுக்கான ஏலம் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஆரம்பமானது. சுமார் 159 நாடுகளை சேர்ந்த 7000க்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இறுதியல் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த பயண டிக்கெட் ஏலத்தில் விற்பனையாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தது.