இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே கடல்சார் கூட்டு பயிற்சி

 

இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே, பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில், கடல்சார் கூட்டு பயிற்சி இன்று நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.

மேற்கு பசிபிக் கடல் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு போர்க்கப்பல்களும், பிலிப்பைன்ஸ் கடற்படையின் பிஆர்பி ஆன்டனியோ லுனா என்ற போர்க்கப்பலுடன், மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் கடல்சார் கூட்டு பயிற்சியில் நாளை ஈடுபடுகின்றன.

இதன் மூலம் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இருதரப்பு உறவுகள் ஒருங்கிணைக்கப்படும்.

தற்போதுள்ள கொரோனா தொற்று காரணமாக, இந்த பயிற்சி தொடர்பில்லா முறையில், பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டும் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சிக்குப்பின், இந்திய கடற்படை கப்பல்கள் மணிலா துறைமுகம் செல்லும்.

இந்தோ பசிபிக் பகுதியில் நிலையான, அமைதியான மற்றும் செழிப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், கடல்சார் துறையில் இருதரப்பின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருநாட்டு கடற்படைகளும் உறுதியாக உள்ளன.