அதிர்ச்சி! மீண்டும் புதிய வகை கொரோனா ! பள்ளிகள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவு!

 


உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தொடர்ந்து 5வது நாளாக தொற்று அதிகமானவர்களுக்கு பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காண்பிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று குறைந்ததால் சீனர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா பரவி வருவது அவர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.