இனி இதற்கும் செயல்முறைக் கட்டணம்! பயனர்கள் கடும் அதிர்ச்சி!

 


பணபரிவர்த்தனைகளில் தற்போது டிஜிட்டல் பேமேண்ட் தான் இளசுகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மொபைல் ரீசார்ஜ் தொடங்கி மின்சார கட்டணம் வரை அனைத்தையும் தங்களது மொபைல் மூலமே செய்து வருகின்றனர். இதனால், பணபரிவர்த்தனை செயலிகளுக்கு இடையேயான போட்டிகளும் அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் வகையிலும் சீரான சேவை கிடைக்கச் செய்யும் வகையிலும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல் கட்டமாக வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான PhonePe, யுபிஐ மூலமாக 50 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் எந்த விதமான கட்டணமாக இருப்பினும் செயல்முறை கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.


இதுகுறித்து போன்பே நிறுவனம் விடுத்த செய்திக்குறிப்பில் “50 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பேமெண்ட் செயலிகள் சிறிய அளவிலான கட்டணம் வசூலிப்பதை போலவே நாங்களும் தொடங்கியுள்ளோம் .அதிலும் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்க உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.
இதனையடுத்து எதிர்காலத்தில் அனைத்து விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் நுகர்வோர்களிடம் ஏற்பட்டுள்ளது .