அடக்கொடுமையே! ஒரே ஒரு ‘டிக்’ போட்டதால் அமெரிக்கா விசாவை மிஸ் செய்த தாத்தா!

 


உலகின் மற்ற நாடுகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா செல்வது வாழ்நாள் கனவு.
அமெரிக்கா செல்ல கம்யூட்டர் மூலமே விசாவிற்கு அப்ளை செய்யலாம். அதன்படி ஸ்காட்லாந்தை சேர்ந்த 90 வயது முதியவர் ஜான் ஸ்டிவன்சன் விடுமுறையை கொண்டாட மனைவியுடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.


ரூ. 2,00,000/-செலவில் டிக்கெட் தங்கும் இடம் என அனைத்தையுமே ஆன்லைனில் ஏற்கனவே புக் செய்திருந்தார். இந்நிலையில் அவர் விசா கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் விசா கிடைக்கவில்லை.
விசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கேட்டிருந்தார் ஜான். அதற்கு பதில் விளக்கம் அளித்துள்ளது .அதில் விண்ணப்ப படிவத்தில் இதற்கு முன்னர் தீவிரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என தவறுதலாக பதில் அளித்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அவரது விசா நிராகரிக்கப்பட்டதுடன் அமெரிக்க செல்ல நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு தன் நிலைமை பற்றி விளக்க முயற்சித்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்து விட்டனர்.
இதே போல் ஒரு சம்பவம் 2017ல் 3வயது குழந்தைக்கு விசா எடுக்கும் போது தாத்தா செய்த தவறால் 3 வயது குழந்தை தீவிரவாதி என கூறி விசா மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.